![]() |
| 'அக்னி' ஏவுகணை வெற்றிக்குப் பிறகு பாராட்டும் கூட்டத்தினர் தோல் மீது - அக்னிச் சிறகுகள் புத்தகத்திலிருந்து |
“கனவு காணுங்கள்”!
குறட்டை ஒலியை கூட்டாய் வைத்திருந்த இளைஞர்களின்
கண்களில் ஒளியைக் கூட்டிய வாசகம்.
முடி வெட்டாததற்கு உன்னைக் காரணம் காட்டிய குழந்தைகளுக்கு
என்றும் முடிசூடா மன்னன் நீ!
அன்று தினசரிகளில் படம் பார்த்து செய்தியறிந்தாய் – இன்று
உன் பாடங்களைக் கண்டு என்ன செய்வதென்று அறிகிறோம்.
காற்று வாங்க கடலுக்குச் சென்றவர்களுக்கு மத்தியில்
கனவினை வாங்கி வந்தாய்.
காகித ஏவுகணைகளில் காதலைச் செலுத்தாமல் உன்
காதல் ஏவுகணைகளை விண்ணில் செலுத்தினாய்.
சோதனைத் தோல்விகளின் போதுகேலியாய் சிரித்தவர்களால் துவளாமல்
பதிலுக்கு ‘புத்தரை சிரிக்கவைத்தாய்’.
அணு ஆயுதம் செய்து இந்தியாவை உலகம்
அண்ணாந்து பார்க்கச் செய்தாய்.
எலியும் பூனையுமாய் அரசியல் புரியாமல்
எளிமையாய் ஆட்சி புரிந்தாய்.
மரண தண்டனைக்கு மாறாய்ப் பேசிய உன்மரணத்தால் அரசின் நிலை மாறுமா? மாற வேண்டும்.
நிலையற்று ஓடும் நதிகளை இணைக்க நீ வற்புறுத்திய
நதிநீர் இணைப்புத் திட்டம் நிலைபெறுமா? நிலை பெறவேண்டும்.
திருக்குறள் முதல் நியூட்ரினோ முதல் உரையாற்றும் உனக்கு
கனவில் தொலையத் தவிக்கும் ஓர் மாணவனின் உரை.
மண்ணிலிருந்து விண்ணுக்கு ஏவிகனைகளை ஏவிய நீ – இன்று
தன்னையே சொர்க்கத்திற்கு ஏவிக்கொண்டாய்!
வியப்பில்லை. வருத்தம்தான்.
உன் ஆத்மா சாந்தியடைந்து உன் அணுத்துகள்கள்
எங்கள் கனவுகளைச் செறிவுரச் செய்யும்
கிரியா ஊக்கியாக இருக்க வேண்டுகிறோம்.

சூலை 27, 2015

No comments:
Post a Comment