மின்வெட்டிலும் குளிர்ந்துப் போகிறேன்
என் கைபேசி உன் பெயரைச் சொல்லிச் சிணுங்கும் போது.
மாசுற்ற காற்றும்
மாசற்றுப் போகும்
உன் சுவாசக் காற்றில்.
உருகும்
பனிக்கட்டிகளும் உறைந்து போகும்
உன் உதட்டினுள்
உதிர்க்கும் புன்சிரிப்பில்.
இப்படி சமூகத்தை
சீர் திருத்தும் நீ,
இந்த சக முகத்தையும்
சீர் செய்யக்கூடாதா?
தீர்வு வரும்
வரை எக்காலத்திர்க்கும் பொருந்தும்!
No comments:
Post a Comment