Sunday, 12 May 2013

என் அன்னைக்கு


அன்னையர் தினம்.

வருடம் முழுதும் உழைக்கும் அம்மாவிற்கு

நாம் சமர்ப்பிக்கும் ஒரே நாள்!



அன்றும் என் அன்னைக்கு வேலை!

ஞாயிற்றுக்கிழமை - ஆதலால்,

சமைத்துக் கொண்டிருக்கிறாள் பிரியாணி
, பாசத்துடன்.



திரும்பத் திரும்பச் சொன்னாலும் மறுக்க முடியாத வாசகம்:

நான் அழுது அவள் சிரித்த ஒரே நாள் நான் பிறந்த நாள்.’



பிரசவத்தின் போது பெண்ணிற்கு பல எலும்புகள் முறியும்

வலி ஏற்படுமாம்!

அன்றிலிருந்து அவள் அம்மா ஆகிறாள்;

உண்மையில் எலும்பு தேயத் தேய நம்மை ஆளாக்குகிராள்.

 

வீட்டில் உள்ள தேவைகள் அனைத்தையும் சலிக்காமல் 

தினமும் சரிகட்டுகிறாள்;

சரியாய்க் கட்டுகிறாள்.

 

இல்லப் பிரச்சினைகளை தீர்த்து வழிநடத்தும் போது

மேலாண்மை வல்லுநர்கலும் மெய்சிலிர்த்துப் போவர்,

என் அன்னையின் செய்கையில்.



காலையில் தலை கோவி பள்ளிக்கு வழியனுப்பியதை

நினைக்கும் போது காலம் கூட கசக்கிறது.
 


எவ்வித பிரச்சனையும் பஞ்சாய்ப் பறந்து போகும்

உன் மடியில் என் தலையின் கனத்தை சாய்க்கும் போது.




என்றும் நலமாய் நீ வாழ வேண்டும் என்னுடன்;

நான் வளர வேண்டும் உன்னுடன்!



வாழ்த்தி வணங்குகிறேன்,

உன் அன்பு மகன்.

அன்னையர் தினத்தன்று.

No comments:

Post a Comment

புத்தாண்டின் இரவு

இ ன்னுமொரு புத்தாண்டு இனிதே பிறக்கின்றது. காலத்தாயின் கண்களில் காணக்கிடைக்காத களிப்பு. ___ ப ட்டாசுகளின் பளபளப்பு - பிள்ளைகளின...