Thursday, 7 March 2013

பயோடெக்செலன்ஸ்-இன் நிறைவு



ஒரு வருட உழைப்பு நேற்று

நன்றே நிறைவுற்றது.



மூன்று வருடப் பழக்கம்,

இறுகிப்போனது இந்த மூன்று நாட்களில்.



சின்னஞ்சிறு சண்டைகள், மனஸ்தாபங்கள் - மூலம்

அடைந்தோம் அரும்பெரும் சாதனைகள்!



உண்ணா உணவு; அமரா வகுப்புகள்;

அனுமதிக்கு காத்திருக்கையில் கழியா மணித்துளிகள்.



உச்சி வெயிலை உணராமல் நடந்துழைத்தோம்;

இன்று உச்சத்தை உணர்கிறோம்.



எப்போது முடியும் என்ற எண்ணம் இப்போது

ஏன் முடிந்தது என்றானது.



சிலரின் பங்களிப்பு அளப்பரியது,

சிலரின் பங்களிப்பு அளக்கக்கூடியது என்றில்லை!



அனைவரின் முயற்சியால் வெற்றி பெற்றோம்;

இனியும் பெறுவோம்.



நிகழ்சியின் நிறைவில் சின்ன நெருடல் காரணம் 

காணவில்லை;

நான்காவது வருடப் பிரிவின் வெள்ளோட்டமோ என்ற அச்சம் 

அரவியது!



என்னச் சொன்னாலும், காலத்தை வெல்ல முடியாது.

ஆகையால், சின்னஞ்சிறு கோபங்களை வென்று 

இணைந்திருப்போம்;

மேலும் பல சிகரங்களை வென்றடைவோம்!


மார்ச் 7, 2013

No comments:

Post a Comment

புத்தாண்டின் இரவு

இ ன்னுமொரு புத்தாண்டு இனிதே பிறக்கின்றது. காலத்தாயின் கண்களில் காணக்கிடைக்காத களிப்பு. ___ ப ட்டாசுகளின் பளபளப்பு - பிள்ளைகளின...