ஒரு வருட உழைப்பு – நேற்று
நன்றே நிறைவுற்றது.
மூன்று வருடப் பழக்கம்,
இறுகிப்போனது இந்த மூன்று நாட்களில்.
சின்னஞ்சிறு சண்டைகள், மனஸ்தாபங்கள் - மூலம்
அடைந்தோம் அரும்பெரும் சாதனைகள்!
உண்ணா உணவு; அமரா வகுப்புகள்;
அனுமதிக்கு காத்திருக்கையில் கழியா
மணித்துளிகள்.
உச்சி வெயிலை உணராமல் நடந்துழைத்தோம்;
இன்று உச்சத்தை உணர்கிறோம்.
எப்போது முடியும் என்ற எண்ணம் – இப்போது
ஏன் முடிந்தது என்றானது.
சிலரின் பங்களிப்பு அளப்பரியது,
சிலரின் பங்களிப்பு அளக்கக்கூடியது – என்றில்லை!
அனைவரின் முயற்சியால் வெற்றி பெற்றோம்;
இனியும் பெறுவோம்.
நிகழ்சியின் நிறைவில் சின்ன நெருடல் – காரணம்
காணவில்லை;
நான்காவது வருடப் பிரிவின் வெள்ளோட்டமோ என்ற
அச்சம்
அரவியது!
என்னச் சொன்னாலும், காலத்தை வெல்ல முடியாது.
ஆகையால், சின்னஞ்சிறு கோபங்களை வென்று
இணைந்திருப்போம்;
மேலும் பல சிகரங்களை வென்றடைவோம்!
மார்ச் 7, 2013
