Sunday, 6 January 2013

காவேரிப் பிரச்சினை - தமிழக முதல்வருக்கு ஒரு ஏழை விவசாயியின் கடிதம்




அம்மா! அனைவரும் அழைக்கின்றனர் அன்பில்;

என் பிள்ளையும்தான் பசியில்!



மக்கள் உண்ணும் உணவு இன்று

எங்களுக்கு ஆனது கனவு.



பசேலென்ற இடங்கள் குடியிருப்பு ஆனது மீதமும்

இன்று தரிசாய்ப் போனது.



பெருகி வரும் எங்களின் உயிரிழப்பு;

வருங்கால உலகிற்கு பேரிழப்பு.



நதிகளையும் தேசியமயமாக்கவில்லை இன்று வரை

நிரந்தர தீர்வும் காணவில்லை.



இருபது ஆண்டுகளுக்கும் மேலாய்ப் பேச்சுவார்த்தை;

ஒவ்வொரு முறையும் கேள்விக்குறியாகின்றது

எங்கள் வாழ்க்கை.



உங்கள் கவனத்திற்கு,

நாட்டின் முதுகெலும்பு சற்றே தோய்வடைகின்றது,

தேய விடமாட்டீர்கள் என்று நம்புகிறோம்.


இப்படிக்கு,

எதிர்கால நலம் விழையும் நிகழ்கால விவசாயி.

சனவரி 6, 2013

No comments:

Post a Comment

புத்தாண்டின் இரவு

இ ன்னுமொரு புத்தாண்டு இனிதே பிறக்கின்றது. காலத்தாயின் கண்களில் காணக்கிடைக்காத களிப்பு. ___ ப ட்டாசுகளின் பளபளப்பு - பிள்ளைகளின...