Sunday, 27 January 2013
Sunday, 6 January 2013
காவேரிப் பிரச்சினை - தமிழக முதல்வருக்கு ஒரு ஏழை விவசாயியின் கடிதம்
அம்மா! அனைவரும் அழைக்கின்றனர்
அன்பில்;
என் பிள்ளையும்தான்
பசியில்!
மக்கள் உண்ணும் உணவு – இன்று
எங்களுக்கு ஆனது கனவு.
பசேலென்ற இடங்கள்
குடியிருப்பு ஆனது – மீதமும்
இன்று தரிசாய்ப் போனது.
பெருகி வரும் எங்களின்
உயிரிழப்பு;
வருங்கால உலகிற்கு
பேரிழப்பு.
நதிகளையும்
தேசியமயமாக்கவில்லை – இன்று வரை
நிரந்தர தீர்வும்
காணவில்லை.
இருபது ஆண்டுகளுக்கும்
மேலாய்ப் பேச்சுவார்த்தை;
ஒவ்வொரு முறையும்
கேள்விக்குறியாகின்றது
எங்கள் வாழ்க்கை.
உங்கள் கவனத்திற்கு,
நாட்டின் முதுகெலும்பு
சற்றே தோய்வடைகின்றது,
தேய விடமாட்டீர்கள் என்று
நம்புகிறோம்.
இப்படிக்கு,
எதிர்கால நலம் விழையும் நிகழ்கால விவசாயி.
சனவரி 6, 2013
Subscribe to:
Comments (Atom)
புத்தாண்டின் இரவு
இ ன்னுமொரு புத்தாண்டு இனிதே பிறக்கின்றது. காலத்தாயின் கண்களில் காணக்கிடைக்காத களிப்பு. ___ ப ட்டாசுகளின் பளபளப்பு - பிள்ளைகளின...
-
-இர . தமிழழகன் PDF-ஆக படிக்க மற்றும் பதிவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும். நன்றி! கடைசிப் படியில் தொங்கிக் கொண்டிருந்தவன் ப...
-
முதல் மாத சம்பளம்... தொலைதூரக் கனவுகளின் தாக்கங்களை சற்றே தளர்த்திவிட்டு வலைதளத்தில் தேடித் துழாவிக் கொண்டிருந்தேன் ஒ...
-
நான்காண்டு கால கல்லூரி அனுபவம் – இன்னும் சில நாட்களில் காலமடைகின்றது. இன்புற்று வாழ்ந்த வாழ்கை இனிதே நிறைவடைகின்றது. கட...

