Saturday, 15 March 2014

கல்லூரியின் நிறைவு


நான்காண்டு கால கல்லூரி அனுபவம் – இன்னும் சில

நாட்களில் காலமடைகின்றது.

இன்புற்று வாழ்ந்த வாழ்கை

இனிதே நிறைவடைகின்றது.



கடைசி நேர புத்தகப் புரட்டல்கள்;

கடைசி பஜ்ஜிக்கான விரட்டல்கள்;

பொருளில்லா பேச்சு வார்த்தைகள்;

அர்த்தமில்லா அரட்டைகள்.



குட்டிச்சுவற்றில் குடியிருந்தோம்;

வகுப்பறைகளுக்கு விருந்தினரானோம்.

பாடவேளைகளில் பார்க்காதிருந்தோம்;

தேர்வு வேளைகளில் திடீர் நண்பர்களானோம்;



எதிர்பாரா உதவிகள்;

காத்திருந்து கிடைத்த உறவுகள்!

சப்தமில்லா சண்டைகள்;

கரவொலியுடன் கூடிய கலாட்டாக்கள்.



இவை அனைத்தும் இனி நடக்கப்போவதில்லை – இக்கல்லூரியில்

இனி நாம் கைகள் கோர்த்து நடக்கப் போவதுமில்லை.



நம் எழுதுகோள் இனி ஒரே வண்ணத்தில் எழுதப்போவதில்லை;

வேறு வண்ணங்களில் வெவ்வேறு எண்ணங்களில்
சிறகடிக்கப் போகிறோம்!

நம் வாழ்க்கை நம் வழியில் செழிக்கட்டும்;

நம் நட்பு இறுதிவரை நிறம் மாறாமல் இருக்கட்டும்.


 பிப்ரவரி 28, 2014

புத்தாண்டின் இரவு

இ ன்னுமொரு புத்தாண்டு இனிதே பிறக்கின்றது. காலத்தாயின் கண்களில் காணக்கிடைக்காத களிப்பு. ___ ப ட்டாசுகளின் பளபளப்பு - பிள்ளைகளின...